பிச்சைக்காரன் திரைப்படத்திற்காக ஸ்டார் ஹோட்டலில் விருந்து வைத்த விஜய் ஆண்டனி.. யாருக்கு என்று தெரிந்தால் அதிர்ச்சியாகிடுவீங்க.?

பிச்சைக்காரன் திரைப்படத்திற்காக ஸ்டார் ஹோட்டலில் விருந்து வைத்த விஜய் ஆண்டனி.. யாருக்கு என்று தெரிந்தால் அதிர்ச்சியாகிடுவீங்க.?


Vijay antony movie promotion

கோலிவுட் திரையுலகில் பிரபல நடிகராக வளர்ந்து வருபவர் விஜய் ஆண்டனி. இசை அமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி, நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் தற்போது திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவரின் நடிப்பு திறமையும், கதைகளை தேர்ந்தெடுக்கும் விதத்தையும் ரசிகர்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.

vijay

இதுபோன்ற நிலையில், விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து சசி இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பிச்சைக்காரன்' இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க விஜய் ஆண்டனி முடிவு செய்து தற்போது திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

'பிச்சைக்காரன் 2' திரைப்படத்தில் காவியா தாபர், ஜான்விஜய், ஒய் ஜி மகேந்திரா, அஜய் கோஸ்ட், யோகி பாபு, ஹரிஷ் பேரடி, பூஜா போன்ற நடிகர்கள் நடித்திருக்கின்றனர். விஜய் ஆண்டனி நடித்திருக்கும் திரைப்படங்களிலேயே 35 கோடி வரை வசூல் செய்திருக்கும் திரைப்படம் 'பிச்சைக்காரன் 2'

vijay

'பிச்சைக்காரன் 2' திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில திரையரங்கில் வெளியாக இருப்பதால் பட ப்ரொமோஷனில் பிசியாக இருந்து வருகிறார் விஜய் ஆண்டனி. மேலும் ஸ்டார் ஹோட்டலில் ஆந்திர மற்றும் தெலுங்கானாவில் இருக்கும் யாசகர்களுக்கு விஜய் ஆண்டனி உணவு விருந்தளித்ததாக வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை ஒரு சிலர் பாராட்டியும், சிலர் பட ப்ரோமோஷனிற்காக  மட்டுமே இவர்கள் இதை செய்வார்கள் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.