சினிமா

விஜய்யும் அஜித்தும் சேர்ந்து நடிக்க இருந்த படம்! ஆனால்? புகைப்பட ஆதாரம் இதோ!

Summary:

Vijay ajith in neruku ner movie posters

ரஜினி, கமலுக்கு அடுத்ததாக இன்றைய தமிழ் சினிமாவின் இரு மிகப்பெரிய துருவங்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். தொடர்ந்து அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளனர்.

இந்நிலையில் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் அஜித் நடித்துவருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படத்தில் விஜய் நடித்துவருகிறார். பொதுவாக அஜித் படம் வெளியானால் விஜய் ரசிகர்கள் கலாய்ப்பதும், விஜய் படம் வெளியானல் அஜித் ரசிகர்கள் கலாய்ப்பதும் வாடிக்கையாக நடந்துவரும் ஓன்று.

ஆனால், விஜய் - அஜித் இருவரும் ஒரே படத்தில் நடிப்பார்களா? இவர்கள் இணைவது எப்போது என சினிமா பிரபலங்கள் உட்பட அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் இவர்கள் இருவரும் ஏற்கனவே இணைந்து நடித்துள்ளனர்.

அடுத்ததாக, இயக்குனர் வசந்த் இயக்கத்தில் தயாரான நேருக்கு நேர் என்ற படத்தில் விஜய் - அஜித் இருவரும் இணைந்து ஒருசில காட்சிகளில் நடித்துளனர். படப்பிடிப்பின் இடையில் ஏற்பட்ட ஒருசில கருத்து வேறுபாடுகளால் அஜித் அந்த படத்தில் இருந்து விலகியுள்ளார்.

அதன்பின்னர் அஜித்துக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்க, படமும் சூப்பர் ஹிட்டாகி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.


Advertisement