அடேங்கப்பா! படத்தின் பெயரே பயங்கர மாஸா இருக்கே! வெளியானது தளபதி 64 படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக்!

அடேங்கப்பா! படத்தின் பெயரே பயங்கர மாஸா இருக்கே! வெளியானது தளபதி 64 படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக்!


Vijay 64th movie named as master

மாநகரம், கைதி போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படத்தில் நடித்துவருகிறார் விஜய்.  இந்த படத்தில் கதாநாயகியாக ரஜினியுடன் பேட்ட படத்தில் நடித்த மாளவிகா மோகன் நடித்துவருகிறார்.

மருத்துவத்துறையில் நடக்கும் ஊழல், நீட் தேர்வு இவற்றை பற்றியதாக தளபதி 64 படத்தின் கதை இருக்கும் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த நிலையில் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

மாஸ்டர் என தளபதி 64 படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பே பயங்கரமாக உள்ள நிலையில் இப்போதில் இருந்தே தளபதி ரசிகர்கள் தங்கள் கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டனர்.