விஜய்க்கு தந்தை இந்த பிரபல வீரரா? உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

விஜய்க்கு தந்தை இந்த பிரபல வீரரா? உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!


vigil movie update

விஜய் அட்லீயுடன் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்து  நடித்துவரும் படம் விஜய் 63. இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார்.

மேலும் விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வரும் இப்படத்திற்கு பிகில் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

vijay

இப்படத்தில் பர்ஸ்ட் லுக்  போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் படத்தின் ட்ரைலர், ரிலீஸ் தேதி போன்ற அடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் பிகில் படத்தில் விஜய்க்கு தந்தையாக முன்னாள் இந்திய கால்பந்து வீரர் விஜயன் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

vijay

இவர் கால்பந்து போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். மேலும் 2003-ம் ஆண்டு அர்ஜூனா விருதும் பெற்றுள்ளார். விஜயன் விஷாலுடன் திமிரு கொம்பன், கெத்து போன்ற படங்களில் நடித்துள்ளார்.