தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
"வெற்றிமாறனை மிரள வைத்த பிசாசு 2!" அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?!
2006ம் ஆண்டு "சித்திரம் பேசுதடி" திரைப்படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். தொடர்ந்து அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இதையடுத்து 2014ம் ஆண்டு இவர் "பிசாசு" என்ற படத்தை இயக்கினார்.
அப்போது இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது. எனவே முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து மிஷ்கின் பிசாசு இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார். இதில் ஆண்ட்ரியா, ராஜ்குமார் பிச்சுமணி, நமீதா கிருஷ்ணமூர்த்தி, விஜய் சேதுபதி, அஜ்மல் அமீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரைலர் கடந்த மாதம் வெளியாகி அனைவரையும் மிரள வைத்துள்ளது. திரைப்படத்தைக் காண அனைவரும் ஆவலாக உள்ள நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்தில் இப்படத்தை பார்த்தாராம்.
மேலும் படத்தை பார்த்த வெற்றிமாறன் மிஷ்கினிடம் "என்னய்யா இப்படி ஒரு படத்தை எடுத்து வெச்சுருக்க?" என்று மிரண்டு போய் பாராட்டினாராம். வெற்றிமாறன் படத்தைப் பாராட்டியுள்ள நிலையில், எப்போது படம் வெளியாகும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர்.