நான்கு நாட்களிலேயே.. செம ஹேப்பியில் வெங்கட் பிரபு! என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!

நான்கு நாட்களிலேயே.. செம ஹேப்பியில் வெங்கட் பிரபு! என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!



Venkat prabhu tweet about profit by maanadu movie

வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி கடந்த 25ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் மாநாடு. இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே சூர்யா,பிரேம் ஜி, டேனியல் போப், கருணாகரன், மனோஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மாநாடு திரைப்படம் வெளிவந்து விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் சாதனையும் படைத்து வருகிறது. இந்நிலையில் மாநாடு படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து படக்குழுவினர் ஒன்றாக சேர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், நான்கு நாட்களில் அனைத்து தமிழக விநியோகஸ்தர்களும் லாபம் அடைந்துள்ளனர் என்பதை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி மக்களே. மேலும் கேரளா, கர்நாடகாவிலும் எங்கள் விநியோகஸ்தர்கள் மூன்றே நாட்களில் லாபம் அடைந்துள்ளனர் என கேள்விப்பட்டேன் என்று நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.