சினிமா

உங்கள வச்சு செஞ்ச வலி இப்போதான் புரியுது! சிஎஸ்கே தீவிர ரசிகர் வெங்கட் பிரபு வருத்தத்துடன் வெளியிட்ட பதிவு!

Summary:

சென்னை அணி வச்சு செய்தபோது, மற்ற ஐபிஎல் அணிகளின் ரசிகர்கள் எப்படி வருத்தப்பட்டு இருப்பார்கள் என தற்போது புரிகிறது என வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

ஐபில் 13 வது சீசன் T20 போட்டிகள் கடந்த செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்நிலையில் பல்வேறு அணிகள் விளையாடி வரும் நிலையில், தமிழ்நாட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் பல திரைப்பிரபலங்களும் சிஎஸ்கே  அணியின் வெறியர்களாக உள்ளனர்.

மேலும் அவர்கள் அனைவரும், சென்னை அணி விளையாடும் போட்டிகள் அனைத்தையும் தவறாமல் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து வந்தனர். அதுமட்டுமின்றி சென்னை அணி சில போட்டிகளில் தோல்வியே அடைந்தாலும் அடுத்த போட்டியில் நன்றாக விளையாடுவர் என முழு நம்பிக்கையுடன் இருப்பர்.  இந்நிலையில் சிஎஸ்கேவின் தொடர் தோல்வியால் தற்போது  ரசிகர்கள் அனைவரும் சிறு அதிருப்தியடைந்துள்ளனர்.

இந்நிலையில் நடிகரும் இயக்குநருமான வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், இத்தனை ஆண்டுகளாக சென்னை அணி வச்சு செய்தபோது, மற்ற ஐபிஎல் அணிகளின் ரசிகர்கள் எப்படி வருத்தப்பட்டு இருப்பார்கள் என்ற வலி தற்போது தான் எனக்கு புரிகிறது என கூறியுள்ளார்.


Advertisement