சினிமா

இப்போ சொல்றேன்.. வேற லெவல்! திடீரென நடிகர் வைபவ்வை புகழ்ந்த வெங்கட்பிரபு! ஏன்னு பார்த்தீர்களா!!

Summary:

தமிழ் சினிமாவில் அழகிய தீயே, மொழி, அபியும் நானும், பயணம், காற்றின் மொழி உள்ளிட்ட படங்களை இ

தமிழ் சினிமாவில் அழகிய தீயே, மொழி, அபியும் நானும், பயணம், காற்றின் மொழி உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மலேஷியா டு அம்னீஷியா. இப்படத்தில் ஹீரோவாக வைபவ் மற்றும் அவருக்கு ஜோடியாக வாணிபோஜன் ஆகியோர் நடித்துள்ளனர். 

மேலும், இத்திரைப்படத்தில் அவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முழுவதும் காமெடி படமான இதனை மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. அப்படத்தில் ஒரு காட்சியில் நடிகர் வைபவ் ‘என் நண்பன் வெங்கட் பிரபு கூட என்னை பாராட்டியதில்லை’ என நடிகர் கருணாகரனிடம் கூறுவார்.

இந்நிலையில் அந்த காட்சியை தனது ட்விட்டரில் பகிர்ந்த இயக்குனர் வெங்கட் பிரபு, 
இப்போ சொல்றேன் வைபவ். மலேசியா டூ அம்னீஷியா செம ஃபன் ரைடு. உனக்குன்னு டெய்லர் மேட் கேரக்டர் ராதாமோகன் சார் எழுதி இருக்காரு. படக்குழுவுக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.


Advertisement