சினிமா

பள்ளிக்கூடமாக மாறிய பிக்பாஸ் வீடு! அரைப்பாவாடை கட்டிக்கிட்டு லாஸ்லியாவை துரத்தும் வத்திக்குச்சி வனிதா! வைரல் வீடியோ!

Summary:

Vattikuchi Vanitha chasing Laslia


பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 50 நாட்கள் கடந்த நிலையில் மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன்,சாக்‌ஷி என 7 போட்டியாளர்கள் கடந்த நாட்களில் வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் வனிதாவின் ரீ என்ட்ரிக்கு பிறகு பிக்பாஸ் இல்லம் சண்டை காட்சிகளுக்கு பஞ்சம் இல்லமல் நகர்கிறது. இதன் விளைவாக நடிகை மதுமிதா தற்கொலை முயற்சி மேற்கொண்டதால் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

கடந்த வாரம் முழுவதும் சண்டையாக சென்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதா தற்கொலை முயற்சி தகவல் பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தற்போது இந்த வாரத்தில் மிகவும் மகிழ்ச்சியாகவே தொடங்கியுள்ளது. 

இன்றைய நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் பிக்பாஸ் வீடு பள்ளிக்கூடமாகவும், போட்டியாளர்கள் மாணவ மாணவியர்களாகவும், கஸ்தூரி டீச்சர் ஆகவும், சேரன் தலைமைஆசிரியராகவும் இருந்து வருகின்றனர். அந்த ப்ரோமோவில் வனிதா லாஸ்லியாவை துரத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.


Advertisement