இசைஞானியின் இசையில் வெளியாகிறது வட்டார வழக்கு திரைப்படம்: அசத்தல் டிரைலர் இதோ.!Vattara Vaazhaku Movie Trailer 

 

மதுரா டாக்கீஸ், சக்தி பிலிம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், நடிகர்கள் சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா ரவி, விஜய் சத்யா, பருத்திவீரன் வெங்கடேஷ், சுப்ரமணியபுரம் விசித்திரன் உட்பட பலர் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் வட்டார வழக்கு.

படத்தின் ஒளிப்பதிவு பணிகளை டோனி சான், சுரேஷ் மணியன் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். எடிட்டிங் பணிகளை வெங்கட்ராஜன் கையாண்டு இருக்கிறார். மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜாவின் இசையில் படம் உருவாகியுள்ளது. 

விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் டிரைலர் காட்சிகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.