அடேங்கப்பா.. இவ்ளோ வசூலா.! 15 நாட்களில் கெத்து காட்டும் தனுஷின் வாத்தி.! கொண்டாடும் ரசிகர்கள்!!vathi-movie-crossed-1000-crores-collection

நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை தொடர்ந்து வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் வாத்தி. இத்திரைப்படம் தெலுங்கில் சார் என்ற பெயரில் வெளியிடப்பட்டது. தமிழில் கிடைத்தது போலவே தெலுங்கிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

 இந்த படத்தில் ஹீரோயினாக சம்யுக்தா மற்றும் அவர்களுடன் சமுத்திரக்கனி, சாய் குமார், ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடித்தனர். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரித்த  இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். 

வாத்தி திரைப்படம் வெளிவந்த 8 நாட்களில் ரூ.75 கோடியை வசூலித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது படம் வெளியாகி 15 நாட்களை கடந்துள்ள நிலையில் வாத்தி திரைப்படம் உலகம் முழுதும் 100 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் உற்சாகத்துடன் அறிவித்துள்ளது. 30 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 100 கோடி வசூல் செய்து லாபத்தை ஈட்டி கொடுத்துள்ளது.