அடிதூள்.. கெத்து காட்டும் தனுஷின் வாத்தி.! 3 நாளில் எவ்வளவு வசூல் பார்த்தீங்களா.!

அடிதூள்.. கெத்து காட்டும் தனுஷின் வாத்தி.! 3 நாளில் எவ்வளவு வசூல் பார்த்தீங்களா.!


Vathi movie collection in 3 days

திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற வெற்றிபடங்களை தொடர்ந்து 
நடிகர் தனுஷ் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில்  நடித்து உருவாகியுள்ள திரைப்படம் 'வாத்தி'. இதில் ஹீரோயினாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படம் தமிழில் வாத்தி என்ற பெயரிலும், தெலுங்கில் நேரடியாக 'சார்' என்ற பெயரில் வெளிவந்தது.

கடந்த 17-ஆம் தேதி வெளிவந்த இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது இப்படம் குறித்த சூப்பரான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 'வாத்தி' திரைப்படம் வெளியான மூன்று நாட்களிலேயே உலகளவில் ரூ.51 கோடிவசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டருடன் வெளியிட்டு அறிவித்துள்ளது.