இதுதாங்க உண்மையான நட்பு.! தனது உயிரை விட நண்பனே முக்கியம்.! வீரன்டா.. சாமிடா.. லிங்குசாமிடா.! நெகிழும் வசந்தபாலன்!!

இதுதாங்க உண்மையான நட்பு.! தனது உயிரை விட நண்பனே முக்கியம்.! வீரன்டா.. சாமிடா.. லிங்குசாமிடா.! நெகிழும் வசந்தபாலன்!!


vasanthabalan talk about lingusami

இந்தியாவில் கொரோனா தொற்று பெரும் அளவில் அச்சுறுத்தி வருகிறது. இதனிடையே திரைத்துறையினர் பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் இயக்குனர் வசந்தபாலன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக பணியாற்றிய வசந்தபாலன் ஆல்பம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 

இதனைத்தொடர்ந்து வெயில், அங்காடித் தெரு, அரவாண், காவியத் தலைவன் உள்ளிட்ட எதார்த்தமான திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் வசந்தபாலன். இந்தநிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தபோது  மருத்துவமனையில் பிபிஇ கிட் அணிந்து தன்னை பார்க்கவந்த இயக்குநர் லிங்குசாமியை தனது உணர்ச்சிபூர்வமான வார்த்தைகளால் பாராட்டி கவிதையாக பகிர்ந்துள்ளார் இயக்குநர் வசந்தபாலன்.

கொரோனா பாதித்தவர்களின் அருகில் சென்றால் தொற்று பரவும் அபாயம் உள்ளது என்பதால் மருத்துவர்கள் தவிர உறவினர்கள், நண்பர்கள் என யாருக்கும் பார்க்க அனுமதி கிடையாது. அதையும் தாண்டி, பிபிஇ கிட் எனப்படும் பாதுகாப்பு கவச உடையை அணிந்துகொண்டு போய் பார்த்தாலும் 15 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும். ஆனால் கொரோனாவுடன் போராடிக்கொண்டிருந்த தனது நண்பர் வசந்தபாலன் மீண்டுவர மருத்துவர்களுடன் மன்றாடி, தனது உயிரைப் பற்றி கவலைக் கொள்ளாமல் பிபிஇ கிட் அணிந்து கொரோனா வார்டுக்குள் சென்று வசந்தபாலனை பார்த்து தன்னம்பிக்கை அளித்து வந்துள்ளார் இயக்குநர் லிங்குசாமி.  

இந்தநிலையில், தற்போது கொரோனாவிலிருந்து மீண்டுள்ள வசந்தபாலன் லிங்குசாமியின் இந்த உன்னத நட்பை கவிதையாக எழுதி பாராட்டியுள்ளார். வீரன்டா.. சாமிடா.. லிங்குசாமிடா ..! நீ ஆயிரம் ஆண்டுகள் வாழ்வாய் !! என நண்பன் இயக்குனர் லிங்குசாமியெய் இணையதளத்தில் கொண்டாடி, உன்னத நட்பை கவிதையாக எழுதி பாராட்டியுள்ளார். இந்தக்கவிதையை பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.