சினிமா

வரலாறு திரைப்படம் முதலில் இந்த முன்னணி நடிகருக்காக தான் உருவாக்கப்பட்டதாம்! யார் அவர் பிரபலம் தெரியுமா?

Summary:

Varalaru ajith kamal

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், அதிக ரசிகர்கள் பட்டாளத்தையும் கொண்டவர் நடிகர் தல அஜித் அவர்கள். இவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வரலாறு படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியை தேடி தந்தது.

ஆனால் இந்த படத்தின் கதையை பிரபல இயக்குனர் சுந்தர்ராஜன் அவர்கள் உருவாக்கி பின்னர் ரவிக்குமாரிடம் கொடுத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் கதையை முதலில் இயக்குனர் சுந்தர்ராஜன் அவர்கள் நடிகர் கமல் ஹாசனுக்காக தான் உருவாக்கினாராம்.

ஆனால் ஒரு சில காரணங்கள் நடிகர் கமல் ஹாசனால் அந்த படத்தில் நடிக்காமல் போனது. அதனை தொடர்ந்து தல அஜித்திடம் கதையை கூறி பின்னர் படமாக்கப்பட்டதாக அப்படத்தில் பணியாற்றிய சிவசங்கர் மாஸ்டர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 


Advertisement