சினிமா

வனிதா காட்டுல மழைதான்.. முக்கிய நடிகரின் படத்தில் கமிட்டான நடிகை வனிதா.. அடுத்தடுத்து குவியும் வாய்ப்புகள்..

Summary:

அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துவருகிறார் நடிகை வனித

அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துவருகிறார் நடிகை வனிதா.

நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான நடிகை வனிதா, தனது தந்தை விஜயகுமாருடன் ஏற்பட்ட மோததால் கடுமையான விமர்சனங்களை சந்தித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தனது மனதில் பட்ட கருத்துக்களை வெளிப்படையாக பேசி மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

இதனை அடுத்து குக்வித் கோமாளி சீசன் ஒன்றில் கலந்துகொண்டு பட்டத்தையும் தட்டிச்சென்ற நடிகை வனிதா தற்போது தொடர்ந்து படங்களில் கமிட்டாகி வருகிறார். பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள காற்று என்ற படத்தில் நடித்துள்ள வனிதா அடுத்ததாக நடமாடும் நகைக்கடை என பெயர் எடுத்த ஹரி நாடாருடன் 2கே அழகானது காதல் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அடுத்ததாக நடிகர் பிரசாந்த் நடிக்க இருக்கும் அந்தகன் படத்தில் நடிகர் பிரசாந்துடன் இணைந்து நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரசாந்த் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அந்தப் பதிவில் கமெண்ட் செய்த வனிதா, படக்குழுவினரோடு இணைய தான் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.


Advertisement