தர்சன் வெளியேற இவர்தான் காரணம்!! வந்ததுமே கொளுத்திப்போட்ட முன்னாள் போட்டியாளர்!! ரணகளமான பிக்பாஸ் வீடு!!

vanitha target sherin for tharsan elimination


vanitha target sherin for tharsan elimination

பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாகவும்,  பரபரப்பாகவும் இன்றுடன் 100வது நாளை கடந்துள்ளது. மேலும் 16 போட்டியாளர்கள் களமிறங்கிய இந்த பிக்பாஸ் வீட்டில் தற்பொழுது ஷெரின், லாஸ்லியா, முகேன்,  சாண்டி என நான்கு பேர் மட்டுமே இறுதி நிலையில் உள்ளனர். 

இந்நிலையில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் இலங்கையை சேர்ந்த தர்சன். விளம்பர மாடலான இவர் வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்து வெற்றிபெறவேண்டும் என பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். இந்நிலையில் அனைத்து டாஸ்க்குகளையும் விறுவிறுப்பாக செய்து வந்த தர்ஷன் கடந்த வாரம் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தர்சன் இறுதி வரை சென்று பிக்பாஸ் பட்டத்தை வெல்வார் என அனைவரும் பெருமளவில் எதிர்பார்த்த நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று அவர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது போட்டியாளர்கள் பார்வையாளர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

vanitha

இந்நிலையில் பிக்பாஸ் இறுதி நிலையில் உள்ள தருணத்தில் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும்வகையில் முன்னால் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தினராக வருகை தந்துள்ளனர். மேலும் இன்று வனிதா, சாக்ஷி  மற்றும் கஸ்தூரி ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

அதனை தொடர்ந்து போட்டியாளர்கள் முன்பு பேசிய வனிதா தர்ஷன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற ஷெரின்தான் காரணம் என்று கூறியுள்ளார்.  இதனால் ஷெரின் அதிர்ச்சியில் மனமுடைந்தநிலையில் பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.  இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.