மாமியார் - மருமகள் உன்னத அன்பை வெளிப்படுத்தும் பிரபல சீரியலில் என்ட்ரி கொடுக்கும் வனிதா... எந்த சீரியல் தெரியுமா.?

மாமியார் - மருமகள் உன்னத அன்பை வெளிப்படுத்தும் பிரபல சீரியலில் என்ட்ரி கொடுக்கும் வனிதா... எந்த சீரியல் தெரியுமா.?


Vanitha joined new serial puthu puthu arthangal

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த சந்திரலேகா என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை வனிதா. சர்ச்சைகளுக்கு பெயர் போன அவர்  விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது செயல்களால் விமர்சனத்திற்கு உள்ளானார். அதனைத் தொடர்ந்து அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதன் வெற்றியாளரானார்.

பின்னர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் மூன்றாவது திருமணம், விவாகரத்து என பல சர்ச்சைகளை சந்தித்தார். ஆனாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர் அடுத்தடுத்து படங்களில் பிஸியாக உள்ளார்.

vanitha

இந்நிலையில் தற்போது ஜீ தமிழில் தேவையானி நடித்து வரும் புது புது அர்த்தங்கள் என்ற சீரியலில் வனிதா இணைந்துள்ளார். இந்த சீரியலில் தேவையானி சொந்த காலில் நிற்கும் தைரியமான பெண்மணியாக நடித்து வருகிறார். 

மாமியார் - மருமகள் உன்னத அன்பை வெளிப்படுத்தும் சீரியலாக இந்த சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது.கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ள வனிதாவால் சீரியலில் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.