ஒரு எம்.பி இப்படி செய்யலாமா?? பிக்பாஸ் விக்ரமனுக்கு ஆதரவாக திருமாவளவன் செய்த காரியம்.! விமர்சித்த நடிகை வனிதா!!vanitha-answered-to-thirumavalavan-who-ask-to-put-vote

கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி விஜய் தொலைக்காட்சியில் தொடங்கி விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்று இறுதிகட்டத்தை நெருங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6. 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது அமுதவாணன், அசீம், நந்தினி, ஷிவின், விக்ரமன் ஆகியோர் மட்டுமே இறுதிபோட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இறுதிகட்டத்திற்கு தகுதியாகியுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் விக்ரமனுக்கு வாக்களிக்க கோரிக்கை விடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது டுவிட்டர் பக்கத்தில், தம்பி விக்ரமனை வெற்றிபெற செய்ய வாக்களிப்போம். அறம் வெல்லும் என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் அந்த பதிவை குறிப்பிட்டு நடிகை வனிதா விஜயகுமார், இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள். இவையெல்லாம் அரசியல் தந்திரம். மரியாதைக்குரிய ஒரு அரசியல் கட்சித் தலைவர், தற்போதைய எம்பி ஒருவர் எவ்வாறு ரியாலிட்டி ஷோவில் குறிப்பிட்ட ஒரு போட்டியாளருக்கு வாக்களிக்க தனது தொண்டர்களிடம் கேட்கலாம் என விமர்சனம் செய்துள்ளார்.