வாணி ராணி புகழ் மகாலட்சுமிக்கு இப்படி ஒரு ஆசையா? என்ன ஆசைன்னு நீங்களே பாருங்கள்!

வாணி ராணி புகழ் மகாலட்சுமிக்கு இப்படி ஒரு ஆசையா? என்ன ஆசைன்னு நீங்களே பாருங்கள்!


vani-rani-mahalakshmi

சன் மியூசிக்  தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கிகள் அறிமுகமான காலகட்டத்திலிருந்து தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் பிரபல தொகுப்பாளினியும் நடிகையுமான மகாலஷ்மி. இவரது ஆங்கரிங் மூலம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தார்.

மகாலட்சுமி பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். படிப்பு முடிந்ததும் சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக  வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போதே சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன் மூலம் சின்னத்திரைக்கு வந்துள்ளார் நடிகை மகாலட்சுமி.

vani rani

அரசி சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்தவர் மகாலட்சுமி. எட்டு வருடங்களுக்கு மேலாக சின்னத்திரையில் நடித்து வருகிறார்.  இறுதியாக சன் டிவியில் தாமரை மற்றும் வாணி ராணி சீரியலிலும், ஜீ தமிழ் சேனலில் தேவதையை கண்டேன் சீரியல் என்றும் பரபரப்பாக நடித்து வந்தார்.

அதன் பின்னர் 2016  ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் காதல் திருமணம் தான். திருமணத்திற்குப் பின்னர் இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

vani rani

தனது மகன் பிறந்த முதல் நாளிலே அவனுடைய ஒவ்வொரு பிறந்த நாளையும் ஒரு வெளிநாட்டில் கொண்டாடணும் என்று இவரும் இவரது கணவரும் முடிவு எடுத்துள்ளார்கள்.தற்போது மகாலட்சுமி மகனுக்கு மூன்று வயது ஆகிறது.தன்னுடைய மகன் முதல் பிறந்த நாளைக்கு பாங்காக் சென்றுள்ளார்கள். இரண்டாவது பிறந்த நாளை சிங்கப்பூரில் கொண்டாடியுள்ளனர். மூன்றாவது பிறந்தநாளுக்கு மலேசியாவுக்கு போக பிளான் செய்துள்ளார்களாம்.

மகனின் 20 வயதில் 20 நாடுகளை அவன் பார்த்து இருக்க வேண்டும் என்பதுதான் மகாலட்சுமி ஆசை என்று கூறியுள்ளார்.