சினிமா

ஆத்தாடி! மேக்கப் இல்லாமல் தெய்வமகள் சத்யா எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!வைரலாகும் புகைப்படம்!

Summary:

vani bhojan without makeup photo viral

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களையே பெரும் வரவேற்பை பெற்ற தெய்வமகள் தொடரில் சத்யா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நீங்கா  இடம்பிடித்தவர் நடிகை வாணி போஜன். மேலும் தெய்வமகள் தொடர் முடிவுக்கு வந்ததை அடுத்து வாணி போஜன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்றார்.

அதனை தொடர்ந்து சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தாவியுள்ள அவர் தற்போது நிதின் சத்யா தயாரிப்பில் நடிகர் வைபவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். மேலும் விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் ஒரு தெலுங்குப்படத்திலும், கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பென்ச் தயாரிக்கும் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடிக்கவுள்ளார். 

மேலும் சமூகவலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் வாணிபோஜன் அடிக்கடி தனது புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் சமீபத்தில் மேக்கப் இல்லாத புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.


Advertisement