ப்பா.. தலைவரு பின்னுறாரே.! ரவீந்தரின் காதல் மழையில் மஹாலட்சுமி.! வைரல் வீடியோ!!

ப்பா.. தலைவரு பின்னுறாரே.! ரவீந்தரின் காதல் மழையில் மஹாலட்சுமி.! வைரல் வீடியோ!!


Vandal mahalakshmi promo video viral

சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜேவாக அறிமுகமாகி பின்னர் சீரியல்களில் நடிகையாக களமிறங்கி பல பிரபல தொலைக்காட்சி சீரியல்களில் வித்தியாசமான ரோல்களில் நடித்து வருபவர் நடிகை மகாலட்சுமி. அவர் சில வராங்களுக்கு முன்பு லிப்ரா ப்ரோடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம். மகாலட்சுமிக்கு அனில் என்பவருடன் திருமணமாகி ஒரு மகன் உள்ளநிலையில் அவருடன் விவாகரத்து பெற்றார். இந்நிலையில் மகாலட்சுமி மற்றும் ரவீந்தருக்கு திருமணமாகி 1 மாதம் ஆனாலும் சமூக வலைதளங்களில் அவர்கள்தான் தற்போது வரை ஹாட் டாப்பிக்காக உள்ளனர். 

அவர்கள் இருவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த ஜோடியை வைத்து பிரபல விஜய் தொலைக்காட்சி வந்தாள் மகாலட்சுமி என்ற நிகழ்ச்சியை தற்போது எடுத்துள்ளது. இது தொடர்பான ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் ரவீந்தர் ஒவ்வொரு வித்தியாசமான பொருட்களை எடுத்து அதனை வைத்து கவிதையாக மஹாலட்சுமிக்கு காதலை ப்ரோபோஸ் செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.