சினிமா

அட.. செம்ம அழகு! சன் டிவி சீரியலுக்காக பெண்ணாக மாறிய நடிகர்! வேற லெவலில் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா!!

Summary:

அட.. செம்ம அழகு! சன் டிவி சீரியலுக்காக பெண்ணாக மாறிய நடிகர்! வேற லெவலில் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா!!

சன் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. காலை தொடங்கி இரவு வரை ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்திற்கும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் தற்போது பல சீரியல்களும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் அதிரடி திருப்பங்களுடன் சுவாரஸ்யங்களுடனுடன் சென்று கொண்டுள்ளது.

அவ்வாறு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில் ஒளிபரப்பாகி வரும் தொடர் வானத்தைப்போல. அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில் தங்கை துளசி வெற்றி என்பவரை காதலித்து வந்த நிலையில், சில காரணங்களால் வெற்றியுடன் பிரச்சினை எழ துளசி அண்ணன் விருப்பப்படி அத்தை மகனை திருமணம் செய்து கொள்ள தயாராகிறார்.

இந்நிலையில் திருமண நிகழ்வுகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்க, அதனை தடுக்க வெற்றி பெண் வேடமிட்டு சில திட்டங்களைத் திட்டுவது போன்ற காட்சிகள் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் தற்போது வெற்றி பெண் வேடமிட்டு இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை கண்ட நெட்டிசன்கள் அட செம அழகாக இருக்கிறாரே எனக் கூறி வருகின்றனர்.


Advertisement