வணங்கான் படத்தின் அசத்தல் அப்டேட்; ரசிகர்களே காத்திருங்கள்.. நாளை அசத்தல் சம்பவம்.!

வணங்கான் படத்தின் அசத்தல் அப்டேட்; ரசிகர்களே காத்திருங்கள்.. நாளை அசத்தல் சம்பவம்.!


Vanangan Movie Update Teaser on 18 Feb 2024 

 

வி ஹவுஸ் ப்ரொடெக்சன்ஸ், சுரேஷ் காமாட்சி ப்ரசன்ஸ் வழங்கும் திரைப்படம் வணங்கான். இயக்குனர் பாலாவின் இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் நடிப்பில் படம் உருவாகி இஇருக்கிறது. 

முதலில் இப்படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால், பின்னாளில் படத்தின் பணிகளில் இருந்து சூர்யா விலகிக்கொண்டதால், அருண் விஜய் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். 

வணங்கான் திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்து இருக்கிறார். விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் டீசர் காட்சிகள் பிப் 19 மாலை 5 மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.