சினிமா

அடேங்கப்பா.. செம கெத்து காட்டும் தல அஜித்! மாஸ் புகைப்படத்தை பகிர்ந்து வலிமை பட வில்லன் கூறியுள்ளதை பார்த்தீர்களா!!

Summary:

அடேங்கப்பா.. செம கெத்து காட்டும் தல அஜித்! மாஸ் புகைப்படத்தை பகிர்ந்து வலிமை பட வில்லன் நடிகர் கூறியுள்ளதை பார்த்தீர்களா!!

தமிழ் சினிமாவில் ஏராளமான மாஸ் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். அவர் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார். 

 மேலும் இப்படத்தில் ஹூமா குரேஷி,  சுமித்ரா, யோகிபாபு, புகழ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதில் வில்லனாக நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். 
வலிமை படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

சமீப காலமாக வலிமை படத்தின் சில ஸ்டில்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் தற்போது இப்படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர் கார்த்திகேயா தல அஜித்துடன் பைக்கில் செம ஸ்டைலாக அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, 'என்னை பற்றி பெருமையாக நினைத்துக்கொள்ளும் ஒரு சில தருணங்களில் இதுவும் ஒன்று, நானும் தல அஜித் சாரும் ' என பதிவிட்டுள்ளார்.  அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement