சினிமா

ட்ரெண்டாகும் தல அஜித்தின் வலிமை பட குடும்பப் புகைப்படம்! அட..யாரெல்லாம் இருக்காங்க பார்த்தீர்களா!!

Summary:

தல அஜித்தின் வலிமை பட குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தல அஜித்தின் வலிமை பட குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் தல அஜித்தின் 60வது திரைப்படம் வலிமை. போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற நேர்கொண்டபார்வை திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தினை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற பல ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் ஹெச். வினோத் இயக்கியிருந்தார்.

இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து  இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.  வலிமை படத்தையும் இயக்குனர் ஹெச். வினோத் இயக்குகிறார். இப்படத்தில் அஜித் ஆக்சன் கலந்த காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இப்படம் மே 1 அஜித்தின் பிறந்த நாளன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வலிமை படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து படத்தின் அப்டேட் கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் அஜித்தின் வலிமை பட குடும்ப புகைப்படம் என ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதனை தல ரசிகர்கள் செம ஹேப்பியாக வைரலாக்கி வருகின்றனர்.
 


Advertisement