சினிமா

பிரமாண்ட மேடையில் விவேக், வடிவேலு ஜாலியாக பேசிகொண்ட வீடியோ! வைரலாக்கி நினைவுகூறும் ரசிகர்கள்!!

Summary:

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தனது காமெடியால் சிரிக்க வைப்பது மட்டுமின்

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தனது காமெடியால் சிரிக்க வைப்பது மட்டுமின்றி ரசிகர்களை சிந்திக்க வைத்து முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் நடிகர் விவேக்.
அவருக்கு நேற்றைக்கு முதல் நாள் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

இது ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் என பலருக்கும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலரும் கண்ணீருடன் நடிகர்  விவேக் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது அவரது அரிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது எந்திரன் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கிய போது வடிவேல் மற்றும் விவேக் இருவரும் காமெடியாக பேசிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் இரு லெஜெண்டுகளும் ஒரே மேடையில் என கமெண்டு செய்து வைரலாக்கி வருகின்றனர்.

 

 


Advertisement