இயக்குனர் பாரதிராஜா மகன் தாஜ்மஹால் நாயகன் காலமானார்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
நடிகர் வடிவேலுவின் உடல்நிலை குறித்து சற்றுமுன் மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்..

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நடிகர் வடிவேலு கொரோனாவில் இருந்து மீண்டுவருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் படப்பிடிப்பிற்காக லண்டன் சென்றிருந்த நடிகர் வடிவேலு சமீபத்தில் சென்னை திரும்பியநிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
வடிவேலுவுக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டுவரும்நிலையில், அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் கொரோனாவில் இருந்து மீண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது."