ஆத்தாடி மறுபடியுமா? குண்டக்க மண்டக்க நடிகருடன் மீண்டும் இணைகிறாரா வடிவேலு? புகைப்படத்தால் பெரும் குஷியில் ரசிகர்கள்!

ஆத்தாடி மறுபடியுமா? குண்டக்க மண்டக்க நடிகருடன் மீண்டும் இணைகிறாரா வடிவேலு? புகைப்படத்தால் பெரும் குஷியில் ரசிகர்கள்!


vadivel with parthiban photo viral

நடிகர் வடிவேலு அவர்கள் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மாபெரும் சிறந்த கலைஞர். இவரின் காமெடியை விரும்பாத மக்கள் யாரும் இல்லை என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு இவரின் நகைச்சுவையான நடிப்பு மக்கள் மனங்களில் இடம் பிடித்துள்ளது.

இன்னும் சில ரசிகர்களுக்கு தங்களது துன்பமான நேரத்தில் வடிவேலு காமெடியில் ஒன்றை பார்த்தாலும் முகத்தில் புன்னகை தோன்ற ஆரம்பமாகி விடும் அந்த அளவிற்கு நடிப்பால் உயரத்தை தொட்டவர் நடிகர் வடிவேலு.

parthiban

நடிகர் வடிவேலு இயக்குனரும்,பிரபல நடிகருமான பார்த்திபனுடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்பட்டது. மேலும் குண்டக்க மண்டக்க, வெற்றி கொடிகட்டு படத்தில் அவர்கள் பேசும் வசனங்கள் மக்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்தது.

இந்நிலையில் பார்த்திபன் மற்றும் வடிவேலு இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இதனை பார்த்திபன் இன்றைய சந்திப்பு, நாளைய செய்தி ஆகலாம் என பதிவிட்டிருந்தார். இதனை கண்ட ரசிகர்கள் மீண்டும் பார்த்திபன் மற்றும் வடிவேலு இணைகிறார்களா என பெரும் எதிர்பார்ப்பபில் உள்ளனர்.