25 வருஷத்திற்கு பிறகு வடிவேலு போட்ட அசத்தலான குத்தாட்டம்! அதுவும் யாருடன் பார்த்தீர்களா! வைரலாகும் தெறி வீடியோ!

vadivel dance with lawrence in sun awrad function


vadivel-dance-with-lawrence-in-sun-awrad-function

தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுடன் இணைந்து நடித்து முன்னணி காமெடி நடிகராக கொடிகட்டி பறந்தவர் நடிகை வைகைப்புயல் வடிவேலு. இவர் எந்த காலத்திலும் எவராலும் அழிக்க முடியாத மாபெரும் இடத்தை மக்கள் மனதில் பிடித்துள்ளார். மேலும் இன்றும் எவ்வளவோ காமெடி நடிகர்கள் வந்தாலும் அவரது இடத்தை நிரப்ப முடியவில்லை.

மேலும் தனது வசனங்களாலும், உடல் பாவனைகளாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த வடிவேலு தற்போது பல மீம்ஸ்  கிரியேட்டர்களுக்கு ஆணிவேராக உள்ளார். இந்நிலையில் ஒரு சில காரணங்களால் சினிமா துறையிலிருந்து விலகி இருந்த வடிவேலு சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியால் நடத்தப்பட்ட சன் குடும்பம் விருது விழாவில் கலந்து கொண்டுள்ளார். 

Vadivelu

மேலும் அதுமட்டுமின்றி வடிவேலு அங்கு நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நடனமாடியுள்ளார்.அதுவும் 25 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த பேட்டாராப் பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

இதனால் அரங்கத்தில் இருந்த சின்னத்திரை,  வெள்ளித்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் பெரும் உற்சாகம் அடைந்தனர். இந்த வீடியோ குறித்த பிரமோ  தற்போது சன் தொலைக்காட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ வைரலான நிலையில் ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.