சினிமா

உயிரிழந்த நடிகர் வடிவேல் பாலாஜியின் வைரல் திருமண புகைப்படம்.! சின்ன வயசுல அப்போ எப்படி இருந்துருக்கார் பாருங்க.

Summary:

Vadivel Balaji marriage photo goes viral

சின்னத்திரை புகழ் நடிகர் வடிவேல் பாலாஜி சில நாட்களுக்கு முன்னர் உடல்நல குறைவால் உயிரிழந்தார். அன்றில் இருந்து அவரது ரசிகர்கள் அவரது புகைப்படம், பழைய வீடியோ ஆகியவற்றை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கிவருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் வடிவேல் பாலாஜி. சின்னத்திரையில் கிடைத்த வரவேற்பை அடுத்து இவர் ஒருசில வெள்ளித்திரை படங்களிலும் நடித்துள்ளார். சின்னத்திரை, வெள்ளித்திரை என கலக்கிவந்த நடிகர் பாலாஜிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர் என்பது யாராலும் மறுக்கமுடியாத ஒன்று.

தனது தனிப்பட்ட திறமையினால் அனைவரையும் சிரிக்கவைத்துவந்த வடிவேல் பாலாஜி, கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது 45 வது வயதில் உடல்நல குறைவினால் உயிரிழந்தார். வடிவேல் பாலாஜியின் இந்த திடீர் மரணம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நடிகர் வடிவேல் பாலாஜியின் நினைவாக அவரது பழைய புகைப்படம், வீடியோ போன்றவற்றை அவரது ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துவருகின்றனர். அந்த வகையில் அவரது திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது ரசிகர்களிடம் வைரலாகிவருகிறது. திருமணத்தின்போது வடிவேல் பாலாஜி எப்படி இருந்துள்ளார் என்று நீங்களே பாருங்கள்.


Advertisement