பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்! அவரது சினிமா வெற்றி பயணத்தின் ஒரு பார்வை!
ஈ பட நடிகர் வில்லனாக நடிக்கும் வி படத்தின் பார்ட்டி பாடல் வெளியானது! இணையத்தை கலக்கும் வீடியோ இதோ!!

தெலுங்கில் மோகன் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வி. இப்படத்தில் சுதீர் பாபு, நிவேதா தாமஸ், அதிதி ராவ், ஜகபதிபாபு, நாசர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் முதன்முறையாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நானி வில்லனாக நடித்துள்ளார்.
திரில்லர் கதையம்சம் நிறைந்த இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் எதுவும் திறக்கப்படாத நிலையில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. மேலும் இப்படத்தை அமேசான் ப்ரைம் வாங்கியுள்ளது. அதனை தொடர்ந்து வி திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதற்கிடையில் சமீபத்தில் இதன் டிரெய்லர் மற்றும் ரொமான்டிக் பாடல் ஒன்று அடுத்ததாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது பார்ட்டி பாடல் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.