யாரும் அதிகம் பார்க்காத விஜே மணிமேகலையின் பள்ளி பருவ கியூட் புகைப்படம் இதோ ! எப்படி உள்ளார்னு நீங்களே பாருங்க..

யாரும் அதிகம் பார்க்காத விஜே மணிமேகலையின் பள்ளி பருவ கியூட் புகைப்படம் இதோ ! எப்படி உள்ளார்னு நீங்களே பாருங்க..



v-j-manimegalai-school-student-photo

சன் மியூசிக்கில் விஜேவாக இருந்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மணிமேகலை. அதனை தொடர்ந்து சன் டிவி, கே. டிவி, சன் நியூஸ் என அனைத்து தொலைக்காட்சிகளிலும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.

இந்நிலையில் விஜே மணிமேகலை, நடன இயக்குனரான காதர் ஹுசைன் என்பவரை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவரது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கணவருடன் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தினர்.

அதனை தொடர்ந்து அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கி, ரசிகர்களை  கவலை  மறந்து  சிரிக்க வைத்து தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக  இருக்கும் அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய பள்ளி பருவ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் .  தற்போது அந்த  கியூட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி  வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

Manimegalai