சினிமா

எலி கடித்த ஆடையை கிழித்துப்போட்டு போஸ் கொடுத்த பிக் பாஸ் நடிகை.. அசால்ட் சம்பவம்.!

Summary:

எலி கடித்த ஆடையை கிழித்துப்போட்டு போஸ் கொடுத்த பிக் பாஸ் நடிகை.. அசால்ட் சம்பவம்.!

ரசிகர்கரின் கேள்விக்கு விளையாட்டுத்தனமாக தொலைக்காட்சி நடிகை பதிலளித்தது வைரலாகியுள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவை சார்ந்த தொலைகாட்சிதொடர் நடிகை உர்பி ஜாவத். இவர் அம்மாநில தொலைக்காட்சித்தொடர்களில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர் ஆவார். 

Bade Bhaiyya Ki Dulhania தொடர், Meri Durga போன்ற பல்வேறு தொடர்களில் இவர் நடித்துள்ளார். இவரை ரசிகர்கள் தொலைக்காட்சி தொடர் கதாபாத்திரமான ஆவ்னி என்றும், பேபன்னாஹ் என்றும் அழைப்பது வழக்கம். சமீபத்தில் உ.பி மாநிலத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். 

சோனி டி.வி., ஸ்டார் பிளஸ்., சாப் டி.வி., கலர்ஸ் தமிழ் போன்ற பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் உர்பி ஜாவத் நடித்திருக்கிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படத்தை அவ்வப்போது வெளியிடும் உர்பி, தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது. 

இந்த புகைப்படத்தில் ஆடையை கிழித்து அணிந்தவாறு பேஷன் உடையில் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதனைக்கண்ட ரசிகர்கள் உடையை எலி கடித்துவிட்டதா? என கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு அவரோ ஆம், இந்த முறை எனது ஆடையை வடிவமைத்தது எலி தான் என தெரிவித்துள்ளார்.


Advertisement