சினிமா

அஜித் ரசிகர்களுக்கு ஒரு உற்சாகமான செய்தி! விஸ்வாசம் பற்றி அதிரடியாக ட்விட்டரில் பதிவிட்ட ஒளிப்பதிவாளர்

Summary:

Update for ajth fans about visvaasam

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தல அஜித்குமார் தற்போது நடித்து வரும் படம் "விசுவாசம்". இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா அவர்கள் இயக்குகிறார். இவர்கள் இருவரும் 4 ஆவது முறையாக இணைந்து படம் பண்ணுவது குறிப்பிடத்தக்கது. 

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா நடிக்கிறார். இவர்கள் இருவரும் பில்லா, ஏகன், ஆரம்பம் மற்றும் தற்போது விசுவாசம் ஆகிய படங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில், விவேக், தம்பிராமையா, விவேக், யோகி பாபு , ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக்  ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். இவருடன் சேர்ந்து இந்த படத்தில் தம்பி ராமையாவும் இரண்டு வேடங்களில் நடிக்கின்றார்.  இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. விவேகம் படத்தை தொடர்ந்து, ரூபன் இப்படத்தையும் எடிட்டிங் செய்கிறார். 

இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு, அஜித்தின் விசுவாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்தபடத்தின் படபிடிப்புகள் வெற்றிகரமாக நிறைவுற்றதாக இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் ஏற்கனவே திட்டமிட்டபடி விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வெளியாகிவிடும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். 


Advertisement