சினிமா வீடியோ

ஐயோ..உமா ரியாஸ்க்கு என்னாச்சு! ஏன் இப்படி ஆகிட்டாங்க! மருத்துவமனையிலிருந்து வெளிவந்த வீடியோ! பதறிய ரசிகர்கள்!!

Summary:

தென்னிந்திய சினிமா உலகில் பிரபல நடிகராக இருப்பவர் ரியாஸ்கான். இவர் தமிழ் மட்டுமின்றி ம

தென்னிந்திய சினிமா உலகில் பிரபல நடிகராக இருப்பவர் ரியாஸ்கான். இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு, ஹிந்தி என பல மொழியிலும் ஏராளமான படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியுள்ளார். இவரது மனைவி உமா ரியாஸ்கான்.

அவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், ஏராளமான தொடர்களிலும் நடித்துள்ளார். மேலும் பல படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி உமா ரியாஸ் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்தநிலையில் தற்போது உமா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து தற்போது உமா ரியாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கோவிட் பாசிட்டிவ் வந்தவுடனேயே என்னை மருத்துவமனையில் அனுமதித்து விட்டனர். கொரோனாவுக்காக பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் சிறப்பாக பணியாற்றினர். அவர்களுக்கு நன்றி. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என கூறியுள்ளார். அந்த வீடியோவில் அவர் பார்ப்பதற்கு மிகவும் சோர்வுடன் காணப்பட்ட நிலையில் ரசிகர்கள் பதறி போயுள்ளனர்.


Advertisement