சினிமா

அடேங்கப்பா.. நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு இவ்வளவு பெரிய மகனா? நன்கு வளர்ந்து எப்படியிருக்கிறார் பார்த்தீர்களா!! வைரல் புகைப்படம்!!

Summary:

தமிழகத்தில் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு கருணாநிதியின் மகன் வழி பேரன் உதயநித

தமிழகத்தில் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு கருணாநிதியின் மகன் வழி பேரன் உதயநிதி ஸ்டாலின். இவர் ஸ்டாலினின் மகன் ஆவார். தமிழ் சினிமாவில் களமிறங்கிய இவர் ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா, கெத்து, சரவணன் இருக்க பயமேன், நிமிர், சைக்கோ என ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வளர்ந்து வருகிறார். மேலும் இவர் சில படங்களையும் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் தற்போது ஆர்டிகல் 15 என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது.  அதுமட்டுமின்றி உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளராகவும் திகழ்ந்து வருகிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கூட சேப்பாக்கம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா. இவர் வணக்கம் சென்னை, காளி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர். உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி. 17 வயது நிறைந்து நன்கு வளர்ந்த அவர் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட ரசிகர்கள் என்னது உதயநிதி ஸ்டாலினுக்கு இவ்வளவு பெரிய மகனா என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.


Advertisement