இந்தியன் 2; என்னாச்சு? மீண்டும் தொடங்குமா? புதிய அப்டேட்டை வெளியிட்ட பிரபலம்!!

இந்தியன் 2; என்னாச்சு? மீண்டும் தொடங்குமா? புதிய அப்டேட்டை வெளியிட்ட பிரபலம்!!


udhayanidhi-new-update-about-indian2-movie

கடந்த 1996ஆம் ஆண்டு நடிகர் கமல் இரட்டை வேடங்களில் நடித்து வெளிவந்த திரைப்படம் இந்தியன். இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற சூப்பர்ஹிட் ஆனது. இந்தியன் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். பாடல்கள் அனைத்தும் செம ஹிட்டானது.

இந்த நிலையில் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்தியன் 2 எடுக்க முடிவு செய்யப்பட்டது. இப்படத்தை ஷங்கர் இயக்க லைக்கா நிறுவனம் தயாரித்தது. மேலும் ஹீரோவாக கமல் நடித்து வந்தார். இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனத்திற்கும், இயக்குனர் ஷங்கருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, படப்பிடிப்பு தளத்தில் விபத்து, கொரோனா என பல காரணங்களால் இந்தியன் 2 படப்பிடிப்பு கடந்த இரு ஆண்டுகளாக தொடங்கப்படாமல் உள்ளது.

இந்த நிலையில் அண்மையில் டான் படத்தின் வெற்றி விழாவில் பேசிய உதயநிதி, லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன் அவர்களிடம் பேசியதாகவும், இந்தியன் 2 திரைப்பட வேலைகள் விரைவில் துவங்கப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்தியன் 2 அப்டேட் வெளியானதால் கமல் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.