தனுஷ் படத்தில் இணையும் முக்கிய தொலைக்காட்சி பிரபலம்.! யாருனு தெரிஞ்சா ஷாக்காகிருவீங்க!!



tv artist aswanth act with thanush

தமி சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். அவருக்கென ஏராளமான தமிழ் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில்  தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வெற்றி பெற்ற படம் வடசென்னை. இப்படத்திற்கு பிறகு அவர்கள் இருவரின் கூட்டணியில் உருவாகி வரும் படம் அசுரன். இதற்கிடையில் கொடி படத்தை இயக்கிய துரை செந்தில்குமாரின் இயக்கத்தில் தனுஷ் தனது 39ஆவது படத்தில் நடிக்கவுள்ளார். அதன் படப்பிடிப்பானது குற்றாலத்தில் துவங்கியுள்ளது.

இதிலும் ‘கொடி போலவே தனுஷ் இரு வேடங்களில் நடிக்கிறாராம். இந்தப் படத்தில் அப்பா, மகன் வேடத்தில் தனுஷ் நடிக்கிறார். படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இந்த படத்தில் அப்பா தனுஷுக்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கவுள்ளார். 

Dhanush

இந்நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்தாக பல படங்களை கைவசம் வைத்திருக்கும் தனுஷ் தொடர்ந்து பிரபல இயக்குனர்  கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. மேலும்  இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்ய லட்சுமி நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் இப்படத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற டிவி நிகழ்ச்சியின் மூலம்  பிரபலமான சிறுவன் அஸ்வந்த் நடிக்கவுள்ளாராம். இவர் சமீபத்தில் விஜய் சேதிபதி நடிப்பில் வந்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்திருந்தார்.