சினிமா

பூட்டிய வீட்டில் சடலமாக கிடந்த பிரபல தொகுப்பாளினி! நடந்தது என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்!

Summary:

tv anger dead inside house

திருவனந்தபுரம் குறுவங்கோணம் என்ற பகுதியில் வசித்து வருபவர் ஜாகீ ஜான். இவர் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்துள்ளார். மேலும் பிரபல விளம்பர மாடலான இவர் யூடியூபில் ஏராளமான சமையல் வீடியோக்களையும் வெளியிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்ற அவர் தற்போது அவரது அம்மாவுடன் வசித்து வந்துள்ளார்.

Jagee John க்கான பட முடிவு

மேலும் பிரபலமாகி பிஸியாக இருந்து வந்த அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது நண்பர் போன் செய்துள்ளார். ஆனால் அவர் வெகுநேரமாகியும் போனை எடுக்கவில்லை. இதனால் பதறிப்போன அவர் இது குறித்து மற்றொரு நண்பரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் அந்த நபர் ஜாகீ வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் அங்கு கதவு உள்ளே தாழிடப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து சந்தேகமடைந்த அவர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அங்கு வீட்டு சமையலறையில் ஜாகீ சடலமாக கிடந்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார்கள் ஜாகீ தற்கொலை செய்து கொண்டுள்ளாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement