பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வி.. தலை தெரித்து ஓடிய டி டி எஃப் வாசன்.! என்ன நடந்தது தெரியுமா.?Ttf vasan 1st movie press meet

சமூக வலைத்தளங்கள் மூலம் தற்போது பிரபலமானவர்கள் பலர் உண்டு. இந்த வரிசையில் யூடியூபில் பலவிதமான வீடியோக்கள் வெளியிட்டு தொடர்ந்து பிரபலமாக இருப்பவர் டிடி எப் வாசன். இவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

TTF

தனது இரு சக்கர வாகனத்தின் மூலம் பைக்கில் வேகமாக சென்று அதனை வீடியோவாக வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் பிரபலமானார். இவரை பல லட்சக்கணக்கான நபர்கள் பின்தொடர்கின்றனர். சமீபத்தில் பைக்கில் வேகமாக சென்றதற்காக நீதிமன்றம் வரை சென்றுபின் விடுவிக்கப்பட்டார்.

இவ்வாறு தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிவரும் டி டி எப் வாசன், தற்போது 'மஞ்சள்வீரன்' எனும் திரைப்படத்தில நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் பூஜை மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மஞ்சள் வீரன் திரைப்படத்தின் பூஜையின் போது பத்திரிக்கையாளர் சந்திப்பில் டிடிஎஃப் வாசன், கூல் சுரேஷ் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

TTF

இந்த சந்திப்பில் டிடிஎப் வாசனிடம்,  நீங்கள் வந்தாலே கூட்டம் வந்து விடுகிறது. நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை பற்றி சமூக வலைத்தளங்கள் வெளியிடுவதால் தான் கூட்டம் வருகிறது என்று பத்திரிக்கையாளர் கேட்டார். இதற்கு டிடிஎப் வாசன் நான் எந்த சமூக வலைத்தளங்கள் பதிவிட்டேன் என்று ஆதாரம் காட்டுங்கள் என்று காட்டமாக பேசினார். இதனை அடுத்து தொடர்ந்து பல்வேறு சர்ச்சையை கிளப்பும் விதமாக கேள்வியை பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு பதில் அளிக்காமல் டிடிஎஃப் வாசன் அந்த இடத்தை விட்டு கிளம்பினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.