சினிமா

15 வருஷத்திற்கு பிறகு, மீண்டும் 30 வயது மூத்த நடிகருடன் ஜோடி சேரும் நடிகை திரிஷா!! யார் அந்த நடிகர் தெரியுமா??

Summary:

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் அடுத்த படத்தில் அநடிகை திரிஷா நடிக்க ஒப்பந்தம

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் அடுத்த படத்தில் நடிகை திரிஷா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை த்ரிஷா. ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் சில காலங்கள் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல், மார்க்கெட் குறைந்த நிலையில் இருந்த நடிகை திரிஷா மீண்டும் காதலை மையமாகக் கொண்ட 96 படத்தில் ஹீரோயினாக நடித்தார். 

இதன் மூலம் அவர் மீண்டும் இளைஞர்களின் கனவுகன்னியாக வலம் வரத் துவங்கினார். அதனைத் தொடர்ந்து அவருக்கு சில பட வாய்ப்புகள் வரத் துவங்கியுள்ளது. இந்நிலையில் திரிஷா தற்போது மலையாளத்தில் ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ளார்.

chiranjeevi with trishaக்கான பட முடிவுகள்

இதில் மோகன்லால் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். மேலும் இப்படத்தில் காதல் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை மோகன் ராஜா இயக்கவுள்ளார். சிரஞ்சீவியை விட 30 வயது வித்தியாசம் கொண்ட திரிஷா கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான ஸ்டாலின்  என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து 15 வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர்.
 


Advertisement