ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் களமிறங்கும் த்ரிஷா.. எந்த படத்தில் தெரியுமா.?Trisha again act in tollywood cinema

1999ம் ஆண்டு "ஜோடி" படத்தில் சிம்ரனுக்குத் தோழியாக ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் அறிமுகமானார் த்ரிஷா. இதையடுத்து 2002ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக "மௌனம் பேசியதே" படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

trisha

இந்நிலையில் திரையுலகிற்கு வந்து 23 ஆண்டுகள் ஆனதையொட்டி தனக்கு ஆதரவு கொடுத்து வரும் ரசிகர்களுக்கும், திரைத்துறையினருக்கும் நன்றி தெரிவித்து மகிழ்ச்சியுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்துவரும் த்ரிஷா, தற்போது அப்படத்திற்காக அசர்பைஜான் நாட்டுக்கு சென்றுள்ளார். இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் "தக் லைஃப்" படத்திலும் நடிக்கவுள்ளார்.

trisha

இந்நிலையில், தெலுங்கில் 7 வருடங்களுக்குப் பிறகு தற்போது இரண்டு படங்களில் திரிஷா ஒப்பந்தமாகியுள்ளார். சிரஞ்சீவியின் "விஷ்வம்பரா" படத்திலும், நாகார்ஜுனாவின் 100வது படமான "லவ் ஆக்ஷன் ரொமான்ஸ்" படத்திலும் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.