இந்தியா சினிமா

இந்திய அளவில் அதிக விலை உயர்ந்த டாப் ஐந்து நட்சத்திரங்கள்! அஜித்திற்கு எத்தனாவது இடம் தெரியுமா?

Summary:

Top paid indian cine actors

ஹாலிவுட் தொடங்கி பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என நடிகர்கள் அனைவரும் பல கோடிகளில் சம்பளம் வாங்குகின்றனர். அவ்வாறு அதிக சம்பளம் வாங்கவும் இந்தியாவின் டாப் ஐந்து நட்சத்திரங்களை வரிசை படுத்தியுள்ளோம்.

5.அஜித் குமார்

தமிழ் சினிமாவில் தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தையும், தென்னிந்திய சினிமாவில் மாபெரும் இடத்தையும் புகழையும் வைத்திருப்பவர் தல அஜித். எந்த ஒரு சினிமா பின்னையும் இல்லாமல் தனது சொந்த முயற்சியாலும், திறமையாலும் இந்த இடத்திற்கு வந்துள்ள தல அஜித் ஹிந்தியில் அக்ஷய் குமாருக்கு நிகரான இடத்தில் உள்ளார். இவர் ஒரு படத்திற்கு நாப்பது முதல் ஐம்பது கோடி வரை சமபலம் வாங்குவதாக தகவல்கள் கூறுகின்றன.


4.ரஜினிகாந்த்

இந்தியாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் ஒரு பேருந்து நடத்துனராக இருந்து சினிமாவில் எட்ட முடியாத உயரத்தை பிடித்துள்ளார். இவர் ஒரு சினிமாவிற்கு அறுபது முதல் என்பது கோடி வரை சம்பளம் வாங்குவதாக தெரிகிறது.

3.ஷாரு கான்

தனது கடின உழைப்பினால் உயர்ந்த நடிகர்களில் நடிகர் ஷாருக்ஹானுக்கு முக்கியம் பங்கு உண்டு. சினிமா மட்டும் இல்லாமல் பலவிதமான நிறுவனங்களைம் நடத்திவரும் இவரின் ஒரு படத்திற்கான சம்பளம் ரஜினிகாந்த் போலவே அறுபது முதல் என்பது கோடி வரை இருக்கலாம் என தெரிகிறது.

2.சல்மான் கான்
அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் இரண்டாவது இடத்தில் உள்ள சல்மான்கான் இந்திய அளவில் மிகவும் பிரபலமானவர். இவர் ஒரு படத்திற்கு என்பது கோடி வரை சம்பளம் வாங்குவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1.அமீர் கான்
ஆமிர் கான் நடித்த அனைத்து படங்களுமே பெரும்பாலும் 500 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. இதன் காரணமாக இவரின் வருமானம் மிக அதிகமாகி வருகிறது, இவர் ஒரு படத்திற்கு சம்பளமாக 100 கோடி பெறுகிறார்.

இது தவிர, அக்ஷய் குமார் (40 - 45 கோடி),விஜய் (25 - 35 கோடி) மற்றும் ஹ்ரிதிக் ரோஷனுக்கு 30 கோடி பெறும் இந்தியாவில் இருந்து நன்கு அறியப்பட்ட சூப்பர்ஸ்டார்கள்.


Advertisement