சினிமா

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 ஹீரோக்கள் யார் யார் தெரியுமா?

Summary:

Top 10 heroes of tamil film industry

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி துவங்கி பல முன்னணி நடிகர்கள் உருவாகியுள்ளனர். இவர்களில் ஒவ்வொரு காலகட்டத்திலும் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோக்கள் யார் என்பதனை கண்டறிய நிச்சயம் ரசிகர்களுக்கு ஒரு ஆர்வம் இருக்கும். 

தற்போது தமிழ் சினிமாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் டாப் 10 நஞிகர்களின் பட்டியலை பார்ப்போம். 

10. கார்த்தி: 8 கோடி


கடந்த சில ஆண்டுகளாக சிம்புவின் வசம் இருந்த இந்த இடத்தை தற்போது கார்த்தி பிடித்துள்ளார். காரணம் சிம்புவின் தொடர் தோல்வி மற்றும் கார்த்தியின் வெற்றிப் படங்கள் தான். கார்த்தி தற்போது ஒரு படத்திற்கு 8 கோடி சம்பளமாக பெற்று 10 ஆவது இடத்தில் உள்ளார். 

9. விஜய் சேதுபதி: 8 முதல் 10 கோடி


மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய் சேதுபதி ஆண்டிற்கு ஒரு வெற்றி படமாவது கொடுத்து விடுகிறார். மேலும் தற்போது மிகப்பெரிய பட்ஜட்டில் உருவாகும் சாய்ரா நரசிம்ம ரெட்டி படத்திலும் நடித்து வருகிறார். 

8. சிவகார்த்திகேயன்: 10 முதல் 12 கோடி


சமீபத்தில் திரைத்துறைக்குள் நுழைந்து கூடிய விரைவில் இந்த இடத்தை பிடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இதற்கு இவரது கடின உழைப்பே காரணம். 

7. தனுஷ்: 15 கோடி


ஆரம்பத்திலிருந்தே பல கலவையான படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் தனுஷ் தற்போது படத்திற்கு 15 கோடி சம்பளம் பெறுகிறாராம். இவரது அடுத்த படம் அசுரன் விரைவில் வெளியாகவுள்ளது. 

6. விக்ரம்: 20 கோடி


சியான் விக்ரம் ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வந்தார். ஆனால் சமீபத்தில் பெரிய அளவில் எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. இருப்பினும் 20 கோடி சம்பளம் பெற்று வருகிறார். 

5. சூர்யா: 20 முதல் 22 கோடி


தற்போது காப்பான் படம் வெளியாகியுள்ள நிலையில் சூர்யா அடுத்தது சூரரை போற்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அவர் 20 முதல் 22 கோடி வரை சம்பளம் பெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

4. கமல்: 25 முதல் 30 கோடி


முதல் இரண்டு இடங்களில் ரஜினியுடன் நீண்ட நாட்களாக இருந்த கமல்ஹாசன் தற்போது 4 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதற்கு காரணம் படங்களை குறைத்து விட்டு அரசியலுக்கு வந்தது தான். அடுத்ததாக இந்தியன் 2 படம் வெளிவரவுள்ளது. 

3. அஜித்: 40 முதல் 50 கோடி


மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள அஜித் விஸ்வாசத்தின் வெற்றிக்கு பிறகு தனது சம்பளத்தை 50 கோடியாக உயர்த்திவிட்டாராம். நேர்கொண்ட பார்வை படத்திற்கு 50 சம்பளம் பெற்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

2. விஜய்: 45 முதல் 50 கோடி


தென்னிந்திய திரையுலகில் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள விஜய் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். சர்க்கார் படத்தை தொடர்ந்து தற்போது பிகில் படத்தில் நடித்து வருகிறார். 

1. ரஜினி: 60 கோடி


தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ள நடிகர் ரஜினி ஒரு படத்திற்கு 60 கோடி சம்பளமாக பெறுகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினி பல ஆண்டுகளாக முதல் இடத்திலேயே இருந்து வருகிறார். 


Advertisement