தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவிற்கு அந்த மாதிரி பழக்கம் இருக்குதா.? உண்மையை வெளிப்படுத்திய பிரபல தயாரிப்பாளர்..

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவிற்கு அந்த மாதிரி பழக்கம் இருக்குதா.? உண்மையை வெளிப்படுத்திய பிரபல தயாரிப்பாளர்..


Tollywood fame acter magesh babu habit


தெலுங்கு திரைத்துறையில் தொடர்ந்து ஹிட் படங்களை அளித்து சூப்பர் ஸ்டாராக இருப்பவர் மகேஷ் பாபு. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரைப்படங்கள் நடித்திருக்கிறார். தெலுங்கில் பல ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும், இவருக்கு தமிழில் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். முதன் முதலாக முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 'ஸ்பைடர்' திரைப்படத்தில் கதாநாயகனாக தமிழில் அறிமுகமானார்.

tollywood

இப்படத்தில் மகேஷ் பாபுவை விட வில்லனாக நடித்த எஸ் ஜே சூர்யா வின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. மகேஷ்பாபுவிற்கு இப்படம் கை கொடுக்கவில்லை. இருந்தபோதிலும் தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க முயற்சித்து வருகிறார் மகேஷ் பாபு.

இதுபோன்ற நிலையில், பிரபல பத்திரிகையாளர் வெங்கட் சுபா 'ஸ்பைடர்' திரைப்படத்தின் தயாரிப்பாளரை தொடர்பு கொண்டு இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு தானே மாஸ் இருக்கிறது. மகேஷ் பாபு எப்படி இந்த கதையை ஒத்துக் கொண்டார் என்று கேட்டு இருக்கிறார்.

tollywood

இதற்கு பதில் அளித்த 'ஸ்பைடர்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் மகேஷ் பாபு கதைகளை கேட்கும் போது தொடர்ந்து  வெற்றி படங்களை அளித்த இயக்குனராக இருந்தால் ஒன்லைன் மட்டும் கேட்டுவிட்டு நடிக்க ஒப்புக்கொள்வார். இவ்வாறாகவே ஸ்பைடர் திரைப்படத்திலும் நடிக்க ஒத்துக் கொண்டார் என்று தயாரிப்பாளர் மகேஷ் பாபுவை குறித்து கூறியிருக்கிறார்.