காலில் விழுந்த புதுமண தம்பதி.. ஆசிர்வதிக்கும் முன் முதல்வர் செய்த காரியம்.. வைரல் வீடியோ காட்சி..

காலில் விழுந்த புதுமண தம்பதி.. ஆசிர்வதிக்கும் முன் முதல்வர் செய்த காரியம்.. வைரல் வீடியோ காட்சி..


tn-cm-palanisamy-wishes-newly-married-couple-viral-vide

புயல் பாதிப்புகளை பார்வையிட சென்ற தமிழக முதல்வர் பழனிச்சாமி அவர்களிடம் புதுமண தம்பதியினர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் வீடியோ வைரலாகிவருகிறது.

கடந்து சென்ற நிவர் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்று கடலூர். கடலூர் மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட தமிழக முதல்வர் பழனிச்சாமி அவர்கள் சென்றிருந்தார். கடலூர் சென்ற முதல்வர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

Tamil Nadu CM

இதனை அடுத்து முதல் வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட காரில் சென்றுகொண்டிருந்தபோது, முதல்வர் வருவதை தெரிந்துகொண்ட புதுமண தம்பதியினர் முதல்வரிடம் ஆசிர்வாதம் வாங்குவதற்காக காத்திருந்தனர், மணமக்கள் தனக்காக காத்திருப்பதை அறிந்த முதல்வர், மணமக்களை வாழ்த்துவதற்காக காரில் இருந்து கீழே இறங்கிவந்தார்.

மேலும், தனது காலில் அணிந்திருந்த செருப்பை கழட்டிவிட்டு முதல்வர் மணமக்களுக்கு வாழ்த்து கூறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

"ஆசிர்வாதம் கேட்ட மணமக்களை காலில் உள்ள செருப்பை கழட்டி விட்டு வாழ்த்துகின்ற இந்த நல்ல மனம் தான் மாண்புமிகு அண்ணன்" என முதல்வருக்கு வாழ்த்துக்கள் குவித்துவருகிறது.