நீ எத்தனை கல்யாணம் வேணும்னாலும் பண்ணிக்கோ, ஆனா.. வனிதாவை மோசமாக வறுத்தெடுத்து டிக்டாக் சூர்யா வெளியிட்ட வீடியோ!

நீ எத்தனை கல்யாணம் வேணும்னாலும் பண்ணிக்கோ, ஆனா.. வனிதாவை மோசமாக வறுத்தெடுத்து டிக்டாக் சூர்யா வெளியிட்ட வீடியோ!


tiktok-surya-video-about-talking-vanitha

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை வனிதா. அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். அப்பொழுது அது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. மேலும் நெட்டிசன்களும், சில பிரபலங்களும் அவரை மோசமாக விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில் வனிதா தற்போது பீட்டர்பால் பயங்கரமாக குடிப்பதாக குற்றம்சாட்டி அவரை விட்டு பிரிந்தார். மேலும் சமீபத்தில் கோவாவில் என்ன நடந்தது என்பதைக் குறித்து கண்ணீருடன் பேசி வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். அதனை தொடர்ந்து அவரைக் கிண்டல் செய்து மோசமாகவும், ஆதரவாகவும் பலரும் கருத்துக்களை கூறத் துவங்கினர்.


 இந்த நிலையில் டிக் டாக் மூலம் பிரபலமடைந்த சூர்யா வனிதா குறித்து பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் இது உங்களது வாழ்க்கை. நீங்கள் தான் தேர்வு செய்தீர்கள். நீங்கள் மூணு இல்லை இன்னும் எத்தனை திருமணம் வேணும்னாலும்  செய்துகொள்ளுங்கள். அது உங்க பர்சனல். உங்களது சந்தோஷத்தையும் சோகத்தையும் கேட்க மக்கள் யாரும் தயாராக இல்லை. மீடியாவில் இப்படி அழுது புரளியை கிளப்புவது போல ஏதாவது செய்தால், உங்கள் மீது, சூர்யா தேவி மற்றும் நாஞ்சில் விஜய் மீது வழக்குபதிவு செய்வேன் என கூறியுள்ளார்.  மேலும் அதில் வனிதாவை கடுமையாக சாடி பேசியும் உள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.