"ஹுக்கும்" மாஸ் பஞ்ச்... ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் ப்ரோமோ.!

"ஹுக்கும்" மாஸ் பஞ்ச்... ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் ப்ரோமோ.!



tiger-ka-hukum-mass-update-about-super-star-rajnikanth

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் திரைப்படம்    ஜெயிலர். இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து  ரசிகர்கள் இப்போது இருந்த இந்த திரைப்படத்தை எதிர்பார்க்கத் துவங்கி விட்டனர்.

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில்  ரஜினிகாந்துடன், தமன்னா, மோகன்லால், யோகி பாபு, சிவராஜ்குமார், மற்றும் ஜாக்கி சராஃப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பான் இந்தியா திரைப்படமாக இது உருவாகி இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Kollywoodஇந்நிலையில் இந்த திரைப்படத்தின் முதல் பாடல் 'நூ கவாலயா' சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பை பெற்று இருந்தாலும் அந்தப் பாடலில் சூப்பர் ஸ்டாரின் பங்களிப்பு மிக குறைவாகவே இருந்ததுதான் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரசிகர்களை  உற்சாகப்படுத்துவதற்காக இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வருகின்ற 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கான ப்ரமோ வை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். டைகரின் கட்டளை என்ற  தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ப்ரோமோவில் ரஜினி தனக்கே உரிய ஸ்டைலில்  கலக்கியிருக்கிறார். இந்தப் போமோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.