சினிமா

அடேங்கப்பா! இவ்ளோ பெரிய குடும்பமா! நயன்தாரா வெளியிட்ட தூக்குதுறையின் குடும்ப புகைப்படம்

Summary:

thookukudurai family photo

பொங்கலுக்கு வெளியாகும் விஸ்வாசம் திரைப்படத்துக்கு, அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வீரம், விவேகம், வேதளம் ஆகியப் படங்களைத் தொடர்ந்து இதனையும் இயக்குநர் சிவாவே இயக்குகிறார். 

விஸ்வாசம் படத்தில் நடிகை நயன்தாராவும், அஜித்துடன் 4 ஆவது முறையாக கைகோர்த்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார்.
 
விஸ்வாசம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக், மோஷன் போஸ்டர் என வெளியான அனைத்திலுமே அஜித்தின் லுக் மட்டுமே வெளியிடப்பட்டிருந்தது.

viswasam images க்கான பட முடிவு

இந்நிலையில், நேற்று நயன்தாராவின் புகைப்படம் வெளியானது. சேலை அணிந்து, கழுத்தில் நகைகள், நெற்றி வகிட்டில் குங்குமம் என இருக்கும் நயன்தாரா இதில் அஜித்தின் மனைவியாக நடித்துள்ளார். 

இதனை தொடர்ந்து இன்றும் நயன்தாரா மற்றொரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் விஸ்வாசம் படத்தில் தூக்குதுறையின் குடும்பம் என டேக் செய்துள்ளார் நயன். கடைக்குட்டி சிங்கம் படத்தில் வந்த கார்த்தியின் குடும்பத்தை விட விஸ்வாசம் படத்தின் குடும்பம் பெரிய குடும்பமாக உள்ளது. இத்தனை கதாபாத்திரங்களை எந்தவகையில் இயக்குனர் கையாண்டுள்ளார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 


Advertisement