திருமலை படத்தில் நடித்த இந்த சிறுவன் தற்போது எப்படி உள்ளார் தெரியுமா.? 17 வருடத்திற்கு பிறகு வெளியான இவரது தற்போதைய புகைப்படம்.

திருமலை படத்தில் நடித்த இந்த சிறுவன் தற்போது எப்படி உள்ளார் தெரியுமா.? 17 வருடத்திற்கு பிறகு வெளியான இவரது தற்போதைய புகைப்படம்.


Thirumalai movie child actor udhay raj current photo

தளபதி விஜய், ஜோதிகா நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் திருமலை. இயக்குனர் ரமணா இயக்கத்தில் ஆக்சன் படமாக வெளியான திருமலை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது.

திருமலை படத்தில் நடிகர் விஜய் பைக் மெக்கானிக்காக வேலை பார்ப்பார். அப்போது விஜய்யுடன் சேர்ந்து சிறு வயது பையனாக ஒருவர் நடித்திருப்பார். படங்களில் ஒருசில காட்சிகளில் மட்டுமே அவர் வந்திருந்தாலும் இன்றுவரை மக்கள் மனதில் அந்த சிறுவன் வரும் காட்சிகள் நினைவில்தான் உள்ளது.

அந்த சிறுவன் பெயர் உதய் ராஜ். திருமலை படத்திற்கு பிறகு அவர் என்ன ஆனார்? எந்த படத்தில் நடிக்கிறார் என எந்த தகவலும் இல்லை. இந்நிலையில், 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தளபதியுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்துள்ளார் உதய் ராஜ். திருமலை மற்றும் மாஸ்டர் படத்தின் புகைப்படங்களை வெளியிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றி கூறியுள்ளார் உதய் ராஜ்.